இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் உதவ வேண்டும்!

சனி ஓகஸ்ட் 06, 2022

கிளிநொச்சி- இலங்கை மக்களுக்கு தமிழக முதல்வர் செய்த உதவியை நாங்கள் என்றும் மறக்க மாட்டோம் என்றும் இலங்கைவாழ் தமிழர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெருக்கடி

இலங்கையின் தற்போது உள்ள சூழல் குறித்தும் அவர்கள் பொருளதார நெருக்கடி எது காரணம் என்றும் இலங்கை கிளிநொச்சியில் உள்ள தமிழர்களிடம், தமிழகத்தில் உள்ள தனியார் செய்தி தொலைக்காட்சியான நியூஸ் 7 தமிழ் பேட்டி எடுத்தது.

விவசாயத் தொழில்

அப்பொழுது தமிழர்கள் கூறுகையில், இலங்கையின் வடக்கு பகுதிகள் முழுவதும் 80 சதவீதம் மக்கள் விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலையில் இலங்கையில் நஞ்சற்ற இயற்கை உணவை உற்பத்தி செய்யும் திட்டத்தை, கோத்தபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அமல்படுத்தியிருந்தது.

செயற்கை உரம்

இதன்படி, விவசாய நிலங்களுக்கு செய்கை உர பயன்பாட்டை முற்றாக தடை செய்த அரசாங்கம், இயற்கை உரத்தை பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவித்திருந்தது.

பெரும் இழப்பு

இந்த நிலையில், பெரும்போகத்தை ஆரம்பித்த விவசாயிகள், இயற்கை உரத்தை பயன்படுத்த முயற்சித்த போதிலும், அது வெற்றி யளிக்கவில்லை. இயற்கை உரம் கிடைக்காத அதேவேளை, செயற்கை உரத்திற்கு தடை விதித்தால், அதுவும் கிடைக்காமல் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்தாக தெரிவித்தனர் இலங்கையின் கிழிநொச்சி தமிழர்கள்.

தமிழ் மக்கள்

கிளிநொச்சி தமிழரான மோகன் என்பவர் கூறுகையில், “விவசாய நடவடிக்கைகள் முற்று முழுதாக பாதிக்கப்பட்டு, பெரும்பாலான விவசாயிகள், வாழ்வாதாரத்தை கூட இழக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறும் தமிழர்கள், இதுவும் பொருளாதார நெருக்கடிக்கு மிக முக்கிய காரணம் என இலங்கை தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

உணவு தட்டுப்பாடு

மேலும் பிற்காலத்தில் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருட்களின் தட்டுபாடு ஏதும் வராமல் இருக்க அரசு விவசாயத்தை ஊக்குவிக்க பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

தமிழக முதல்வர்

அதே வேளையில் இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு மட்டும் உதவிகள் செய்யாமல், இலங்கையின் ஒட்டுமொத்த மக்களுக்கு உதவிகளைக் செய்த தமிழக முதல்வருக்கு எங்களது நன்றியைக் மனமார தெரிவித்து கொள்வதாக அங்குள்ள ஈழத்தமிழ் மக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். மேலும் தமிழக முதலமைச்சர் தொடர்ந்து எங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.