இலங்கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

சனி நவம்பர் 21, 2020

வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவம் இருவார காலப் பகுதிக்கு வீட்டி லிருந்து பணியாற்றுவதற்குத் தீர்மானித் துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை மத்திய வங்கியின் ஊழியர் ஒரு வர் கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப் பட்டதை அடுத்தே இந்த தீர்மானம் எடுத்துள்ளதாக  இலங் கை மத்திய வங்கி பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.

அதன் படி அங்கு பணியாற்றும் அனைத்து ஊழியர்களும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்குத் தேவை யான அனைத்து வழிமுறைகளையும் நடைமுறைப் படுத்தியுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித் துள்ளது.

மேலும், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஏனைய ஊழி யர்களுக்கு கொவிட்-19 கொரோனா தொற்று இல்லை என் பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள் ளது.

எனவே இதன் முன்னெச்சரிக்கை ஏற்பாடாக வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவம் இருவார காலப்பகுதிக்கு வீட்டி லிரு ந்து பணியாற்றுவதற்குத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக் கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதுமக்கள் இலத்திரனியல் வாயிலாக cbslgen@cbsl.lk/fcrd@cbsl.lk அல்லது 011-2477966 என்ற இலக்கத் தின் ஊடாக தொடர்புகொள்ள முடியுமெனவும் மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.