இலங்கைக்கு கிழக்கே பாரிய நிலநடுக்கம்!

ஞாயிறு ஏப்ரல் 14, 2019

இலங்கையை அண்மித்த கடற்பகுதியில் இரண்டு நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

 இந்த நிலநடுக்கங்கள் இன்றிரவு 9.04 அளவில் இந்து சமுத்திரத்தின் மொஹென் பகுதியை அண்மித்து இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.

 5.3 மற்றும் 4.9 ரிக்டர் அளவுகளில் இந்த நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலநடுக்கம் தொடர்பில் இதுவரை வேறு எந்தவிதமான தகவல்களும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.