இலங்கைத் தீவில் 3ம் நிலைக்கு தள்ளப்படும் தமிழினம்!

செவ்வாய் ஜூன் 18, 2019

மாற்றியமைக்க புலம்பெயர் தமிழர்கள் என்ன செய்யவேண்டும்?

விடுதலைப் போராட்டமோ அரசியல் போராட்டமோ எதை எடுத்துக்கொண்டாலும் சிறந்த  இராஜதந்திரம் இல்லையயனில் அவை தோற்றுப்போகும்.

தலைமைத்துவம் எத்தகைய வழிமுறைகளை வகுத்தாலும் தற்கால உலகுக்கு ஏற்ப தம்மைத் தற்காத்துக் கொண்டு செல்வதற்கு இராஜதந்திரம் முக்கியமானது. உலகின் பல நாடுகளின் அரசியல் பொருளாதார வெற்றிக்கு இராஜதந்திர செயற்பாடுகளில் பெற்ற அடைவு மட்டங்கள் அதிகரித்தமையே காரணமாக அமைந்தன.

தமிழ் மக்கள் மத்தியில் இந்த இராஜதந்திரம் எந்த அடைவு மட்டத்தில் இருக்கின்றது என்பதை ஆராய்ந்தால் அது வெறும் பூச்சியமாகவே காணப்படுகின்றது.

தமிழீழ இராஜதந்திரி அன்ரன் பாலசிங்கத்திற்கு பின்னர் தமிழ் மக்களுக்கு சிறந்த இராஜதந்திரி கிடைக்கவில்லை. விடுதலைப் போராட்டம் பலவீனம் அடைந்தமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

இராஜதந்திரி அன்ரன் பாலசிங்கம்,பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் போன்றோர் சர்வதேச அரங்கில் தமிழரின் இராஜதந்திர அடையாளமாகத் திகழ்ந்தனர். அவர்களின் திடீர் மறைவு தமிழ் மக்களை போரியல் வீழ்ச்சிக்கு கொண்டுசென்றது.

முள்ளிவாய்க்கால் அவலத்திற்கும் இது ஒரு காரணமாக அமைந்தது. இந்த அவலத்திற்கு பின்னரும் தமிழினம் இராஜதந்திர செயற்பாடுகளில் பலவீனமாக நிலையில் இருப்பதாலேயே இலக்கை நோக்கிப் பயணிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது.

சிறீலங்காவில் கடந்த ஏப்ரல் 21 தாக்குதல் வரை தமிழர் அரசியல் பிரச்சினையே சூடு பிடித்திருந்தது. தமிழர் பிரச்சினைக்கான தீர்வு, அதற்கு சார்பாக அரசியல் யாப்பு மாற்றம் போன்றன பேசுபொருளாக இருந்தன.நில விடுவிப்பு, கைதிகள் விடுவிப்பு, மீள்குடியேற்றம், அபிவிருத்தி போன்றன தமிழர் தரப்பின் கோரிக்கைகளாக இருந்தன.

எனினும், ஐ.எஸ்.ஐ.எஸ் முஸ்லிம் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பின்னர் தமிழர்களின் பிரச்சினைக் கோவைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு பெட்டகத்திற்குள் போடப்பட்டன.

ஐ.எஸ்.ஐ.எஸ் தாக்குதலின் பின்னர் அண்மையில், முஸ்லிம் அமைச்சர்கள் தமது பொறுப்புக்களை இராஜிநாமா செய்ததைத் தொடர்ந்து சிறீலங்கா அரசியல் பெரும் மாற்றத்திற்கு உட்பட்டிருக்கின்றது.

முஸ்லிம் அமைச்சர்களை மீண்டும் அரசுக்குள் உள்வாங்குவது தொடர்பான பேச்சுக்களே நடை
பெற்று வருகின்றன.

ஏப்ரல் 21 தாக்குதலுக்கு பின்னர் சிறீலங்காவில் முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சிலருக்கு கடும் எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன. குறிப்பாக, அமைச்சர் றிசார்ட் பதியுதீன், கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி இவர்கள் உடனடியாக பதவி விலக்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை வலுத்தது. இதன் உச்சமாக, கடும்போக்கு சிங்களப் பிக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் உண்ணாவிரதத்தில் குதித்தார்.

இந்தப் பின்னணியில் சிறீலங்கா அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அனைத்து அமைச்சர்களும் பிரதி அமைச்சர்களும் உடனடியாகவே தமது அமைச்சுப் பதவிகளில் இருந்து கூட்டாக வெளியேறினர்.

முஸ்லிம்களின் மத அமைப்பான உலமா சபையின் ஆலோசனைக்கு இணங்க, இனத்தையும் மதத்தையும் பாதுகாக்கும் நோக்குடன் தாம் அனைவரும் பதவி விலகுகின்றார்கள் என அவர்கள் அறிவித்தனர்.

இந்தப் பதவி விலகல் சிங்களத் தலைவர்களின் ஆலோசனை மற்றும் அனுசரணையுடனேயே இடம்பெற்றது. அத்துரலிய ரத்தின தேரர் உண்ணாவிரதம் தொடங்கியவுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முஸ்லிம் அமைச்சர்களுக்கு ஒரு அறிவுறுத்தலை விடுத்திருந்தார்.

அத்துரலிய இரத்தின தேரருக்கு ஏதாவது நேர்ந்தால் அது சிங்கள -முஸ்லிம் கலவரத்தை ஏற்படுத்திவிடும் என்பதால் இவர்கள் பதவி விலகுவது நல்லது என்றார்.

எனினும், சிறீலங்கா அமைச்சரவையின் சிரேஸ்ட அமைச்சரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவுடன் சந்திப்பு ஒன்றை ஏற்படுத்திய பின்னர் தாம் பதவி விலகப்போகின்றனர் என அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் தெரிவித்தனர்.

அதன்படி அலரி மாளிகையில் ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பை முடித்துக்கொண்டு, அங்கு வைத்தே முஸ்லிம் தலைவர்கள் செய்தியாளர் சந்திப்பை ஏற்பாடு செய்து தாம் பதவி விலகுகின்றனர் என அறிக்கை விட்டனர்.

முஸ்லிம்கள் இந்த பொது அறிவித்தலை உலமா சபையின் அலுவலகத்தில் வைத்து அல்லது சிரேஸ்ட பள்ளிவாசல் ஒன்றில் வைத்து விடுத்திருக்க முடியும். அதை விடுத்து ரணில் விக்கிரமசிங்கவின் அலரி மாளிகையில் வைத்து பொது அறிவித்தல் விடுத்து பதவி விலகவேண்டிய அவசியம் இல்லை. இதன்
மூலம் பதவி விலகல் ஒரு அரசியல் நாடகம் என்பது தெளிவாகின்றது.

பெளத்த சிங்களப் பிக்குகளை ஏமாற்றும் செயற்பாடு என்பது அம்பலமாகியிருக்கின்றது.

எனினும், முஸ்லிம் தலைவர்களின் இந்த அறிவிப்பானது தமிழ்த் தலைவர்களுக்கு முகத்தில் அறைந்தால் போன்றது. இதுவரை எந்தத் தமிழ்த் தரப்பும் இப்படி கூட்டாக தமது பதவிகளை உதறித் தள்ளியதில்லை. இந்த பதவி விலகல் மூலம் முஸ்லிம் தலைவர்கள் தமது இராஜதந்திரத்தை வெளிப்
படுத்தியிருக்கின்றனர்.

சிங்களத்துடன் ஒட்டியுறவாடும் தமது ஒட்டுண்ணி வாழ்க்கையை அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.

சிறீலங்காவில் தமது இருப்பைத் தக்கவைத்துக்கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாகவே முஸ்லிம்களின் இந்த பதவி விலகல் பார்க்கப்படுகின்றது. முஸ்லிம்களைப் பொறுத்தவரை அவர்கள் எப்போதும் ஒட்டுண்ணிகளேதான். எந்த அரசு பதவிக்கு வருகின்றதோ அந்த அரசில் போய் ஒட்டிக்
கொள்வார்கள். அது அவர்களின் வியாபாரத் தந்திரம். உயிர்வாழ் இராஜதந்திரம்.

இலங்கைத் தீவில் ஆதிக்குடிகள் தமிழ் மக்கள் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் கிடையாது. இந்த தொல்லியல் வரலாற்று உண்மையை சிங்களவர்கள் கூட நிராகரிக்க முடியாதவர்களாக உள்ளனர். இந்த ஆதிக்குடிகளாக, ஆதிக்கம் செலுத்த வேண்டிய தமிழினம் தற்போது மூன்றாம் நிலைக்குச் சென்றுகொண்டிருக்கின்றமை மிகவும் வேதனையானது.

முஸ்லிம்களின் இனப்பெருக்க வீதம் வேகமாக அதிகரித்துள்ளது. கடந்த இரு தசாப்த காலத்தில் தமிழ் மக்களின் பிறப்பு வீதம் சடுதியாகக் குறைந்துள்ள நிலையில், முஸ்லிம்கள் இன விகிதாசாரத்தில் முன்னோக்கிய நிலையை அடைந்துள்ளனர். தற்போது நாட்டில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

கடந்த 1989 ஆம் ஆண்டு சிறீலங்காவின் சனத்தொகைக் கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 21 இலட்சத்து 24 ஆயிரமாகவும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 12 இலட்சத்து 49 ஆயிரமாகவும் காணப்பட்டது.

2012 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை 22 இலட்சத்து 70 ஆயிரமாகவும் முஸ்லிம்களின் எண்ணிக்கை 18 இலட்சத்து 69 ஆயிரமாகவும் உயர்ந்தது.

13 ஆண்டுகளில் தமிழர்களின் சனத்தொகை 1 இலட்சத்து 46 ஆயிரத்தால் மட்டுமே உயர்ந்தது. ஆனால், முஸ்லிம்கள் 6 இலட்சத்து 20 ஆயிரம் பேரால் உயர்ந்தனர். தற்போது தமிழ் மக்களின் எண்ணிக்கை வெறும் 32 இலட்சத்து 10 ஆயிரமாக உள்ளது. முஸ்லிம்களின் எண்ணிக்கை 22 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இன்னும் பத்தாண்டுகளில் மலையகத் தமிழர்களைத் தவிர்த்து, இரண்டாவது பெரிய இனமாக முஸ்லிம்கள் வந்துவிடக்கூடிய ஆபத்து உள்ளது.

111

தமிழ் மக்களோ தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளோ இந்த விடயத்தில் எந்த அக்கறையும் எடுத்துச் செயற்படவில்லை. தத்தமது சுகபோக வாழ்விற்காகவே அவர்கள் அரசியலில் இருக்கின்றனர். நாட்டில் உள்ள தமிழ் மக்களின் எண்ணிக்கை கூட அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

சனத்தொகையைப் பெருக்குவதற்கான எந்தவொரு செயற்பாடும் அவர்களிடம் இல்லை. இவ்வாறான சூழ்நிலையிலேயே சிறீலங்கா தமிழர்களின் அரசியல் இராஜதந்திரம் நகர்ந்துகொண்டிருக்கின்றது.

முஸ்லிம்களின் மார்க்கத் தத்துவத்தின் அடிப்படையில் ஒரு ஆண் நான்கு திருமணங்கள் செய்ய
வேண்டும். அதை அவர்கள் நேர்த்தியாகச் செய்து தமது இனத்தைப் பெருக்கி வருகின்றனர். தமிழ்ச் சிறுமிகள் உட்பட தமிழ்ப் பெண்களைக் கடத்திச் சென்று அவர்களை மதம் மாற்றித் திருமணம் செய்கின்றனர்.சில தமிழ்ப் பெண்கள் குழந்தைகளுடன் கைவிடப்பட்டிருக்கின்றனர்

சிறீலங்காவில் தமிழ் மக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கான சூழ்ச்சிகளிலும் முஸ்லிம்கள் ஈடுபட்டு வருகின்றனர். தாம் நடத்துகின்ற உணவகங்கள், விடுதிகளில் தமிழ் மக்களுக்கு கருத்தடை மாத்திரைகள் கலக்கப்பட்ட உணவுகளைப் பரிமாறுகின்றனர் என்ற விடயம் நீண்ட காலமாகவே பேசப்பட்டது.

ஏப்ரல் 21 குண்டுவெடிப்பு அதன் உண்மையை உணர்த்தியிருக்கின்றது. முஸ்லிம் பயங்கரவாதிகளின் தங்குமிடங்களில் பெரும் எண்ணிக்கையில் கருத்தடை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும், கிழக்கில் உள்ள இந்து ஆலயம் ஒன்றில் தன்னை அடையாளம் மாற்றி, அர்ச்சகருக்கு உதவியாளராக நின்ற முஸ்லிம் ஒருவர் பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மாத்திரைகளைக் கலந்து பக்தர்களுக்கு வழங்கினார் என மக்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார்.

இவ்வாறு தமிழ் மக்களின் சனத்தொகையைக் குறைத்து தமது எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு முஸ்லிம்கள் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், தமிழ் மக்கள் பேசா மடந்தைகளாக இருப்பது அவர்களைப் படுகுழிக்குள் தள்ளும்.

விடுதலைப் போராட்டம் காரணமாக மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழ் மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். நாற்பதாயிரத்திற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் தங்களை மாவீரர்கள் ஆக்கியிருக்கின்றனர். இது தமிழினத்தைப் பொறுத்தவரை பெரும் இழப்பு.

தமிழ் இனப்பெருக்க வீதத்தில், தமிழ் மக்களின் எண்ணிக்கை சடுதியாகக் குறைந்தமைக்கு இதுவே முக்கிய காரணம். யுத்த காலத்தில் தமிழ் இளைஞர் , யுவதிகள் திருமணம் செய்வதில் அக்கறை காட்டவில்லை.போராட்டத்திலேயே அக்கறை செலுத்தினர்.

மேலும் சிங்கள தேசத்தின் திட்டமிட்ட பொருளாதாரத் தடைகள் காரணமாகவும் அடிக்கடி ஏற்பட்ட இடப்பெயர்வுகள் காரணமாகவும் தமிழ் மக்களால் அதிக குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. யுத்தம் இடம்பெற்ற முப்பது ஆண்டுகளில் முஸ்லிம்களின் இனப்பெருக்க வீதம் சடுதியாக அதிகரித்தது. இதனால் அவர்கள் தற்போது சிறீலங்காவின் இரண்டாம் மக்கள் தொகையை எட்டும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.

தற்போது, தாயகத்தில் கிராமப் புறங்களில் கூட பொருளாதார நெருக்கடி காரணமாக பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளும் வீதம் குறைந்து செல்கின்றது. கடந்த முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழர்கள் 10 குழந்தைகளுக்கு மேல் வரை பெற்றனர். பெரும்பாலும் கிராமப்புறங்களில் ஒரு குடும்பம் ஐந்து குழந்தைகளுக்கு மேல் பெற்றிருப்பர்.

ஆனால், இப்போது இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றெடுக்கும் தாய்மாரைக் காணமுடியவில்லை.
இந்த விடயத்தில் புலம்பெயர் தமிழர்கள் அதிக அக்கறை செலுத்த வேண்டும். தாயகத்தில் தமிழ் மக்கள் குழந்தைகளைப் பெற்றுக்கொள்வதை நீங்கள் ஊக்குவிக்கவேண்டும். புலம்பெயர் தேசத்தில் உள்ள அதிகமான தமிழ் மக்கள் ஈழத்தில் நடைபெற்ற விடுதலைப் போராட்டத்தைக் காரணம் காட்டியே புலம்பெயர்ந்தவர்கள்.

இதனால் அவர்கள் இந்தப் பெரும் பணியைச் செய்ய முடியும்.

மூன்றாவது குழந்தை பெற்றுக்கொள்ளும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அப்பிள்ளைகளை வளர்ப்பதற்கான செலவை மாதாந்தம் வழங்கவேண்டும். புலம்பெயர் தேசத்தில் வசிக்கும் ஒவ்
வொரு தமிழரும் அல்லது ஒவ்வொரு குடும்பமும் அங்கு வீணே களியாட்டங்களுக்கு செலவிடும் பணத்தில் குறிப்பிட்ட தொகையை மீதப்படுத்தி தாயகத்தில் குழந்தைகளை வளர்ப்பதற்கான செலவை ஈடுசெய்ய முடியும்.

இந்த விடயத்தில் அக்கறை செலுத்தத் தவறினால், இன்னும் இரு தசாப்பதங்களுக்குள் இலங்கைத் தீவில் முஸ்லிம்கள் இரண்டாவது பெரிய இனம் என்ற இலக்கை எட்டிவிடுவர் என்பது திண்ணம்.

இந்த எச்சரிக்கை மணி ஓசை அனைத்துலகில் வாழும் ஒவ்வொரு தமிழர்களின் காதுகளிலும் விழவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு.

தாயகத்தில் இருந்து’ காந்தரூபன்

நன்றி: ஈழமுரசு