இலங்கையில் கொரோனா தொற்றால் நேற்று உயிரிழந்த ஐந்துபேரின் விபரம்

செவ்வாய் பெப்ரவரி 23, 2021

கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலை யில் மேலும் 05 பேர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

01 . தூனகஹ பகுதியைச் சேர்ந்த 33 வயதான பெண் ஒரு வர் , குருணாகல் போதனா வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கொ ரோனா தொற்று , நீரிழிவு நோய் மற்றும் சிறு நீரக நோய் காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி உயிரி ழந்துள்ளார்.

02. நுகேகொட பகுதியைச் சேர்ந்த 82 வயதான பெண் ஒரு வர் கொ ரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா கார ணமாக 2021 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார்.

03.கொழும்பு-12 பகுதியைச் சேர்ந்த 69 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டபோது, கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா ,இரத்தம் விஷமானமை, இதய நோய் மற்றும் சிறுநீர் வழியில் ஏற்பட்ட தீவிர தொற்று காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 20 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

04. மினுவாங்கொட பகுதியைச் சேர்ந்த 83 வயதான பெண் ஒருவர் கம்பஹா மாவட்ட வைத்தியசாலையில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் , கொவிட் -19 கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப் பட்டதை அடுத்து முல்லேரியா ஆதார வைத்தியசாலை க்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா, மற்றும் சிறுநீரக பாதிக்கப்பட்டமை காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

05.கொழும்பு – 13 பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் ஒருவர் கொ ரோனா தொற்று, நீரிழிவு நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் காரணமாக 2021 பெப்ரவரி மாதம் 05 ஆம் திகதி வீட்டிலே உயிரிழந்துள்ளார்.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.