இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கியது

புதன் சனவரி 27, 2021

 இலங்கையில் மேலும் 755 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதில் 748 பேர் திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச் சாலை கொத்த ணியில் கொரோனா தொற்றா ளர்களுடன் நெருக்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட மற்றும் சிறைச்சாலை கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 56 , 036 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 07 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆயிரத்து 922 ஆக உயர்ந் துள்ளது. தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 8ஆயிரத்து 588 பேர் சிகிச்சை பெற்று வருகி ன்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 51 ,046 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா சந்தேகத்தில் 863 பேர் வைத்திய கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்த வர்களின் மொத்த எண்ணிக்கை 288 ஆக அதிகரித் துள்ளது.