இலங்கையில் தொலைத்தொடர்பு வசதிகளை பயன்படுத்துவோர் அதிகரிப்பு

செவ்வாய் செப்டம்பர் 22, 2020

நிதியமைச்சின் அண்மைய நிதியாண்டு தகவலுக்கு அமைய நாட்டில் தொலைபேசி பாவனையாளர்களின் எண்ணிக்கையானது அதிகரித்துள்ளது. இதற்கமைய ஒவ்வொரு நூறு பேருக்கு 161.4 என்ற ரீதியில் தொலைபேசி பாவனை அதிகரித்துள்ளதுடன் , இணைய அணுகலானது ஒவ்வொரு நூறு பேருக்கு 61.5 என்ற ரீதியிலும் உயர்வடைந்துள்ளது .

மேலும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குப்படுத்தல் ஆணைக்குழுவின் தகவலுக்கு இணங்க நாட்டில் 31.8 மில்லியன் தொலைபேசி இணைப்புக்கள் செயற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிதியாண்டு அறிக்கையானது அண்மையில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும் .