இலங்கையில் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் தமிழகத்தில் சாதி-மத மோதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஞாயிறு ஏப்ரல் 28, 2019

இலங்கையின் கொழும்புவில் உள்ள தேவாலயங்களிலும், தங்கும் விடுதிகளிலும் நடைபெற்ற  தொடர் குண்டுவெடிப்பில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள்  உயிரிழந்திருப்பது  தாங்கொணாத் துயரத்தைத் தருகிறது. 

இக்கொடுரத் தாக்குதலைக்கண்டித்தும் தமிழகத்தில் அதிகரித்து வரும் சாதி-மத வன்முறை வெறியாட்டங்களைக் கண்டித்தும்  நாம் தமிழர் கட்சி மற்றும் *தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பாக* இன்று 26-04-2019 வெள்ளிக்கிழமை, பிற்பகல் 03 மணியளவில் *சென்னை, வள்ளுவர்கோட்டத்தில்*  தலைமை ஒருங்கிணைப்பாளர் *சீமான்* அவர்களின் தலைமையில் *மாபெரும்  ஆர்ப்பாட்டம்* நடைபெற்றது.