இலங்கையிலுள்ள வெளிநாட்டவர்களின் விசாக் காலம் நீடிப்பு

செவ்வாய் அக்டோபர் 27, 2020

 இலங்கையில் தங்கியுள்ள அனைத்து வெளிநாட்டவர்களதும் விசா காலம் டிசம்பர் 05 ஆம் திகதி வரை 60 நாட்களால் நீடிக்கப்பட்டுள்ளது.

விசாக் கட்டணம் மற்றும் விசாவை பெறுவதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும் என குடிவரவு குடியகல்வு திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாவைப் பெற்றுக்கொள்வதற்காக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் விசா பிரிவுக்கு சமுகமளிப்பதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.