இலங்கையின் உள்நாட்டு செயற்பாடுகளில் நம்பிக்கையில்லை

புதன் செப்டம்பர் 16, 2020

 பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் தெரிவித்துள்ளன. ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 45அமர்வில் ஜெனீவா தீர்மானத்துக்கு பிரதான அனுசரனை வழங்கிய நாடுகள் இதனை தெரிவித்துள்ளன.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் தனது உரையில் இலங்கை குறித்து வெளியிட்ட கரிசனைகளை கருத்தில் எடுத்துள்ளதாக அந்த நாடுகள் தெரிவித்துள்ளன.

கனடா ஜேர்மனி பிரித்தானியா வடக்குமசெடோனியா மற்றும் மொன்டிநீக்ரோ ஆகிய நாடுகளின் சார்பில் உரையாற்றிய பிரிட்டனின் மனித உரிமை விவகாரங்களுக்கான தூதுவர் ரீட்டா பிரென்ஞ் இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த மார்ச் அமர்வில் இலங்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் சமர்ப்பிக்கவுள்ள அறிக்கையை பேரவை ஆராயும் என அவர் தெரிவித்துள்ளார்.