ஈழத்தமிழர் இனப்படுகொலை தீர்மானத்தை ஜெனீவாவில் சமர்ப்பிப்பேன்- கருணாஸ்

ஞாயிறு மார்ச் 17, 2019

ஈழத்தமிழர் தொடர்பாக 2013ம் ஆண்டு தமிழ் நாட்டின் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் நாடு சட்ட மன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு சிறீலங்கா அரசால் நடத்தப்பட்டது இனப்படுகொலை எனவும் அதற்காக சிறீலங்கா அரசாங்கம் மீது பன்னாட்டு சமுகம் சர்வதேச விசாரணை நடத்துவதுடன் பொருளாதார தடை விதிக்கவேண்டும்.

காமன் வெல்த்தை இந்தியா புறக்கணிக்க வேண்டுமெனவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை முன்வைத்து தாம் ஐநாவில் வரும் 20ம் நாள் உரையாற்றவிருப்பதாக நடிகரும் தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினரும் தென்னிந்திய நடிகர் சங்க துணைத்தலைவருமான கருணாஸ் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு தெரிவித்துள்ள கருணாஸ் மேலும் தெரிவிக்கையில்;

2013ம் ஆண்டு இனப்படுகொலை தீர்மானம் அனைத்துகட்சி ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டபோதும் அதை இதுவரை எவரும் ஐநாவில் சமர் ப் பிக்கவில்லை என்பது கவலைக்குரியது.
எனக்கு கடந்த ஆண்டு வருவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தபோதும் விசா கிடைக்கவில்லை.இம்முறை கிடைத்துள்ளது.

நான் இலங்கை சென்றிருந்த சமயம் அங்கு ஈழத்தமிழர் நிலைமைகளை பார்வையிட்டேன்.

இன்னமும் அங்கு தமிழர்கள் இராணுவ அடக்குமுறைக்குள் வாழ்கின்றார்கள்அங்கு அவர்களது நிலம் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதை அவதானித்தேன் என மேலும் கருணாஸ் தெரிவித்தார்.