இலவசமாக பெறப்படும் பிறப்பு பத்திரத்திற்கு கட்டணம்!

செவ்வாய் பெப்ரவரி 12, 2019

மண்முனை வடக்கு பிரதேச யெலகத்தில் வரவேற்பு கரும பீடத்தில் மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளவர்களில் மட்டக்களப்பு போதனாவைத்தியசாலையில் பிறந்த அனைத்து குழந்தைகளுக்கும் மண்முனைவடக்கு பிரதேச செயலகத்தில் தான் பதிவு எடுக்க வேண்டி உள்ளது.

இதற்காக வருபவர்கள் விரும்பினால் அஞ்சல் உறையில் முத்திரை ஒட்டி பெயர் விலாசம் குறிப்பிட்டு கொடுத்தால் தூரபிரதேசத்தில் உள்ளவர்களுக்கு காத்திருக்காமல் தபாலில் பதிவு அனுப்புவது வழக்கம்.

ஆனால், தற்போது மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பதிவு எடுக்க வரவேற்பு கரும பீடத்தில் வரும் அனைவரிடமும் கட்டாயத்தின் பெயரில் ரூபா 20 அறவிடப்படுகிறது. பொதுமக்கள் நாம் பிரதேச செயலகத்திற்கு அருகில் வசிப்பவர்கள் வந்து நேரடியாக பதிவு எடுக்கிறோம் காத்திருந்து பதிவை எடுத்து செல்கிறோம் என கூறினாலும், இது பிரதேச செயலாளரின் கட்டளை கட்டாயம் ரூபா 20 தாராவிட்டால் பதிவு தரமுடியாது என்கிறார்களாம் .

ஆக மொத்த்தில் ஒரு பதிவு ரூபா 100 அஞ்சல் உறை முத்திரை ரூபா20 மொத்த்தில் ஒரு பதிவுக்கு ரூபா120வுடன் தான் மண்முனை வடக்கு பிரதேச யெலகத்திற்கு செல்ல வேண்டி உள்ளது.

ஏன் மற்றைய பிரதேச செயலகத்தில் 5 நிமிடத்தில் பதிவு வழங்கும் போது இவர்களால் 1மணித்தியாலயத்தில் வழங்க முடியாது?  தூரபிரதேசத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் அவர்கள் விரும்பினால் அஞ்சல் செலவை அறவிடலாம் தானே  என பொதுமக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.