இம்ரானின் சிறையறையில் கையடக்க தொலைப்பேசி மீட்பு!

திங்கள் டிசம்பர் 02, 2019

திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடையவரான மொஹமட் நஜிம் மொஹமட் இம்ரான் எனப்படும் 'கஞ்சிபானை இம்ரான்' தடுத்து வைக்கப்பட்டுள்ள பூசா சிறைக்கூடத்திலிருந்து கையடக்க தொலைப்பேசி மீட்கப்பட்டுள்ளது. 

பூசா சிறையில் இன்று மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கையடக்க தொலைப்பேசி மீட்கப்பட்டதாக சிறச்சாலைகள் திணைக்களம் தெரிவித்தது. 

மேலும் சம்பவம் குறித்த விசாரணைகள் செய்வதற்காக கையடக்க தொலைப்பேசியை சிறைச்சாலை தலைமையகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.