இன அழிப்புக்கான நீதியை வென்றெடுக்க தமிழகத்திலுள்ள தமிழ் உறவுகள் உதவ வேண்டும் - சி.வி.விக்னேஸ்வரன்

செவ்வாய் சனவரி 14, 2020

இலங்கை வட மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரனின் சென்னை உரைகளிலிருந்து……

இலங்கையில் தமிழ்பேசும் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதியைக் கோருகிறோம்.

2009ல் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த பல்லாயிரக் கணக்கான தமிழ் மக்கள், இன அழிப்புக்கான நீதி என்கிற போராட்ட வலுவை எமக்குத் தந்துள்ளனர்.

இனப்படுகொலைக்கு பரிகார நீதி கோரி, வடமாகாண சபை தீர்மானம் நிறைவேற்றியது.. இலங்கை அரசோ முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற மனித குலத்துக்க எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை இன்றுவரை விசாரிக்கவில்லை அதற்கு மாறாக, சர்வதேசத்துக்கே சவால் விடுவதுபோல், போர்க்குற்றவாளிகளை உயர் பதவிகளில் அமர்த்துகிறது. அதனால்தான், சர்வதேச நீதியைக் கோருகிறோம்.

சர்வதேச அளவில் இதைக் கொண்டு செல்லவும், இன அழிப்புக்கான நீதியை வென்றெடுக்கவும், தமிழகத்திலுள்ள தமிழ் உறவுகள் உதவ வேண்டும்.