இனி மனைவியை விவாகரத்து செய்தால்? சீன நீதிமன்றம் அதிரடி!

வியாழன் பெப்ரவரி 25, 2021

சீனாவில் முதல் முறையாக, விவாகரத்தான மனைவிக்கு ஜீவனாம்ச தொகையுடன் கூடுதலாக வீட்டுவேலைகளை செய்ததற்கு பணி ஊதியமும் வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பெய்ஞ்சிங் நகர தம்பதிக்கு விவாகரத்து வழங்கி அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பில்,

இனி ஒவ்வொரு மாதமும் ஜீவனாம்ச தொகையாக 2000 யுவான் பணமும், ஐந்து ஆண்டுகளுக்கு வீட்டுவேலை செய்ததற்கு 50,000 யுவான் பணமும் முன்னாள் மனைவிக்கு கணவர் தரவேண்டும் என்று அந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 

வீட்டுவேலை மற்றும் பிள்ளை வளர்ப்பில் கணவர் எந்த உதவியும் செய்யவில்லை என்றும், மேலும் தான் செய்த வேலைகளுக்கு தக்க ஊதியம் கணவரை வழங்குமாறு உத்தரவிடச் சொல்லியும் மனைவி விண்ணப்பித்திருந்தார்.

தீர்ப்பை வழங்கிய நீதிபதி வீட்டுவேலை என்பது 'உணரமுடியாத' சொத்து எனவும், அதைக் கொண்டு இணையரில் மற்றவர் சுய முன்னேற்றம் அடைவதை நாம் எளிதாக கணக்கிட முடியாது என்றும் கூறியுள்ளார். 

நாள் ஒன்றுக்கு சீனப் பெண்கள் வீட்டுவேலைகளில் 4.5 மணி நேரம் செலவிடுகிறார்கள். இது இந்தியப் பெண்கள் செலவிடும் நேரத்தை ஒத்தது. இந்த வீட்டு வேலை நேரம் ஆண்கள் செய்வதை விட 2.5 மடங்கு அதிகமானது என தன் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.