இங்கிலாந்தில் பரவும் குரங்கு அம்மை நோய்! மக்கள் அச்சம்-

புதன் ஜூன் 29, 2022

லண்டன்- இங்கிலாந்தில் 1,076 பேர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி பல்லாயிரக்கணக்கான மக்களை பலி கொண்டுள்ளது. இதன் பாதிப்பால் மீள முடியாத மக்கள், தற்போது தான் அதிலிருந்து இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர்.

குரங்கு அம்மை

இந்த நிலையில் கொரோனா வைரஸ் விட அச்சுறுத்தக் கூடிய குரங்கு அம்மை நோய் பரவல் முதல் முறையாக ஆப்பிரிக்கா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம், இந்த குரங்கு அம்மை நோய் பரவல் குறித்த எச்சரிக்கை விடுத்த நிலையில் பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஐக்கிய அரபு நாடு என இதுவரை 39 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது.

உலகம் முழுவதும்

உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது, கவலைக்குரியதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பின் தலைவர் அதானம் டெட்டேராஸ் தெரிவித்திருந்தார். மேலும் இந்நோய் பரவலின் தன்மைகள் மற்றும் அதனை எதிர்கொள்வது உள்ளிட்ட வழிமுறைகளை ஆலோசிப்பதற்காக கடந்த 23ம் திகதி உலக சுகாதார அமைப்பு ஆலோசனை கூட்டம் நடத்தியது.

1076 பேர் 

இந்நிலையில் இங்கிலாந்தில் குரங்கு அம்மை நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுகுறித்த அறிக்கையை அந்நாட்டு அரசின் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், கடந்த ஜூன் 26ம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நிலவரப்படி, இங்கிலாந்தில் 1,076 உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது

நோய் பரவல்

இதுகுறித்து இங்கிலாந்து சுகாதார பாதுகாப்பு நிறுவன இயக்குனர் டாக்டர் சோபியா மக்கி கூறுகையில்; 'இங்கிலாந்தில் குரங்கு நோய் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது நாடு முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

தடுக்க முடியும்

மேலும், வரும் நாட்களில் இந்த பாதிப்புகள் மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. மக்கள் அதிகளவில் வெளியில் செல்லாமலும், புதிய நபர்களை சந்திக்காமலும், வீட்டிலேயே இருந்தால் நோய் தொற்று பரவலை தடுக்க முடியும் என்றார்.