இனப்படுகொலையாளி கோட்டாபய வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவராம்!

திங்கள் அக்டோபர் 21, 2019

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான தெளிவான திட்டம் தன்னிடம் இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.ஹக்மன பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மிளகு, பாக்கு போன்றவற்றை இந்நாட்டிற்கு எடுத்துவந்து மீள் ஏற்றுமதி செய்யும் நடவடிக்கையை முழுமையாக நிறுத்தி உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தேசிய பாதுகாப்பு அல்லது பொருளாதார வளர்ச்சியை முன்னெடுத்து செல்ல தன்னால் மாத்திரமே முடியும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.