இனப்படுகொலையாளிகள் கொரோனாவால் அதிக பாதிப்பு

திங்கள் மே 18, 2020

கொரோனா கொவிட் 19 கொல்லுயிரின் தொற்று காரணமாக இலங்கையில் பாதிப்படைந்தவர்களில் 523 பேர் சிறீலங்கா இனப்படுகொலைக் கடற்படையைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கையில் இதுவரை 970 பேர் (17ம் திகதி இரவு வரை) பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் அரைவாசிக்கும் அதிகமாக இனப்படுகொலைக் கடற்படையினரே அடங்கியுள்ளனர். இந்த இனப்படுகொலைக் கடற்படையினராலேயே அவர்களின் உறவினர்கள் 37 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

இதேவேளை, இதுவரை 538 தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளதுனர். இவர்களில் 183 பேர் இனப்படுகொலைக் கடற்படையினர் என்பதை சிறீலங்காவின் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு வெளிப்படுத்தியுள்ளது.

அத்துடன், இலங்கையில் இதுவரை கொரோனாவால் 9 மரணங்கள் பதிவாகியுள்ளன. 413 தொற்றாளர்கள் தொடர்ந்தும் அங்கொடை தேசிய தொற்றுநோய் தடுப்பு வைத்தியசாலை, வெலிகந்த, முல்லேரியா ஆதார வைத்தியசாலைகள், காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, மினுவங்கொடை வைத்தியசாலை, சிறீலங்கா இனப்படுகொலைக் கடற்படையின் வைத்தியசாலை மற்றும் சிலாபம் - இரணவில் வைத்தியசாலை, ஹோமாகம ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.