இன்புளுவன்சா வைரஸ்; பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

செவ்வாய் டிசம்பர் 10, 2019

இன்புளுவன்சா வைரஸ் தொற்று பரவி வருவதாக அது தொடர்பில் பொதுமக்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 

இன்புளுவன்சா வைரஸ் உடலில் உட்புகுந்த நபர் ஒருவர் அதற்கு எதிராக மருந்தை பயன்படுத்துவதனால் பயனில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக IDH காய்ச்சல் நோய் தொடர்பான விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்கிரம தெரிவிக்கையில், தற்பொழுது கூடுதலாக பரவி வருவது இன்புளுவன்சா B என்ற வைரஸ் ஆகும். இது உட்புகுந்தால் காய்ச்சல் ,உடல்வலி, முக்கில் நீர் வடிதல் போன்ற அறிகுறிகள் காணப்படும் என்று கூறியுள்ளார்.