இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு!

செவ்வாய் ஓகஸ்ட் 13, 2019

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

92 ஒக்டைன் பெற்றோல் 2 ரூபாவாலும் 95 ஒக்டைன் பெற்றோல் 4 ரூபாவாலும் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் விலை 3 ரூபாவினாலும் அதிகரிக்கப்படுவதாகவும் நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைவாக இந்த விலை அதிகரிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது . இருப்பினும், ஒட்டோ டீசல் விலையில் எதுவித மாற்றங்களும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.