கூட்டாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட மறுநாள், மெல்போர்னின் மேற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள சன்ஷைனில் இரண்டு குழந்தைகளுடன் தமிழ்த் தாயான புஷ்பநாயகியைச் சந்தித்தேன். 2009 இல் இலங்கை இராணுவம் எமது மக்களுக்கு எதிரான போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்றதை அவள் நேரில் பார்த்தாள்.