இன்று உலக சுகாதார தினம் - அனைவருக்கும் ஆரோக்கியம்

ஞாயிறு ஏப்ரல் 07, 2019

ஒவ்வொரு தனிமனிதனின் சுகாதார மேம்பாடுக் கருதி  1948 ஆம் ஆண்டு தொடக்கம் உலக சுகாதார மையம் தொடங்கப்பட்ட ஏப்ரல் 7ஆம் திகதியை  ஆண்டுதோறும் உலக சுகாதார தினமாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது. 

அதன்படி இந்த ஆண்டும் அனைவருக்கும் ஆரோக்கியம் என்ற கருப்பொருளுடன் உலக சுகாதார தினம் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகிறது. இது தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட #HealthForAll என்ற ஹேஷ்டேக்கையும் உலக சுகாதார நிறுவனம் உருவாக்கியுள்ளது. 

இந்த சுகாதார தினத்தன்று நம் ஒவ்வொருவரும் தமது உடல்நலம் பேணுவது தொடர்பாக உறுதி மொழி எடுக்க வேண்டுமென உலக சுகாதார நிறுவனம்  கேட்டுக்கொண்டுள்ளது. 

அன்றாடம் புதியப்புதிய நோய்களுக்கு எதிராக நாம் செயற்பட வேண்டியுள்ள இந்த சூழ்நிலையில் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் மனிதன் ஆரோக்கியத்தைப் பேணுவதால் மட்டுமே ஆரோக்கியமான சமூகத்தை  உருவாக்க முடியும். 

தினசரி கட்டாயம் உடற்பயிற்சி மேற்கொள்வது. குறைந்தபட்சம் நடைப்பயிற்சி, உள்ளிட்ட சில உடற் பயிற்சிகளையாவது மக்கள் மேற்கொள்ளுவதன் மூலம் தமது ஆரோக்கியத்தில் அக்கரை கொண்டவர்களாக ஒவ்வொருவரும் செயற்பட வேண்டும் என்று வைத்தியர்கள் வலியுறுத்துகின்றனர்.