இன்ஸ்டாகிராமில் டார்க் மோட் வசதி அறிமுகம்!

புதன் அக்டோபர் 09, 2019

இன்ஸ்டாகிராம் செயலியின் ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஒ.எஸ். தளங்களில் டார்க் மோட் வசதி வழங்கப்படுகிறது.

இன்ஸ்டாகிராம் செயலியில் படிப்படியாக டார்க் மோட் வசதி வழங்கப்படுகிறது. ஆண்ட்ராய்டு மற்றும்  ஐ.ஒ.எஸ். என இருவித தளங்களிலும் புதிய வசதிக்கான அப்டேட் வழங்கப்படுகிறது.

ஐ.ஒ.எஸ். 13 மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம் கொண்ட சாதனங்களில் டார்க் மோட் ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமிலும் அது தானாக வேலை செய்யும். எனினும் ஆண்ட்ராய்டு போனில் டார்க் மோட் வேலை செய்தாலே இன்ஸ்டாகிராமிலும் டார்க் மோட் இயங்கும்.

 

 

Adam Mosseri@mosseri

Starting today, you can use Instagram in dark mode on iOS 13 or Android 10. Turn dark mode on your phone to try it out. 👀

4,159

Twitter விளம்பரத் தகவல் மற்றும் தனியுரிமை

இதைப் பற்றி 1,789 பேர் பேசுகிறார்கள்

 

முன்னதாக கூகுள் நிறுவனம் தனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தில் டார்க் மோட் வசதியை வழங்கியது. இதில் பெரும்பாலான கூகுள் செயலிகள் புதிய டார்க் மோட் பெறும் என கூகுள் தெரிவித்திருந்தது. எனினும், பெரும்பாலான மூன்றாம் தரப்பு செயலிகளில் டார்க் மோட் வசதி விரைவில் வழங்கப்பட இருக்கிறது.

அந்த வரிசையில் தற்சமயம் இன்ஸ்டாகிராம் இணைந்திருக்கிறது. இன்ஸ்டாகிராம் செயலியின் டார்க் மோட் AMOLED சார்ந்து இயங்குகிறது. இதன் பின்னணியில் கருப்பு நிறம் இருக்கும். இது பெரும்பாலான செயலிகளில் சீராக இயங்கும். வரும் அப்டேட்களில் இந்த அம்சம் மேலும் மேம்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.