இந்திய டெஸ்ட் அணியில் தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பில்லை ரசிகர்கள் வருத்தம்!

புதன் சனவரி 06, 2021

இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, இந்திய அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

மெல்போர்னில் நடைபெற்ற முதல் பகல் இரவு டெஸ்ட் போட்டியில், இந்தியாவுக்கு எதிராக எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

இரண்டாவதாக மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நாளை (ஜனவரி 7) தொடங்குகிறது. இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்கள் பட்டியல் இன்று (ஜனவரி 6) வெளியிடப்பட்டது. காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் சர்மா, டெஸ்ட் அணியின் துணை கேப்டனாகச் சேர்க்கப்பட்டுள்ளார். நவ்தீப் சைனி அறிமுகமாகிறார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் அபாரமாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனுக்கு இடம் கிடைக்கவில்லை.

இந்திய அணியில் விளையாடும் 11 வீரர்கள்... ரஹானே (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பாண்ட், ஜடேஜா, அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், நவ்தீப் சைனி. ஆகியோர் நாளை நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறார்கள்.

தமிழக வீரர் நடராஜன், நாளை நடக்கவிருக்கும் போட்டியில் விளையாடுவார் என்று எதிர்பார்த்த அவருடைய ரசிகர்கள், டெஸ்ட் அணியில் இடம் இல்லை என்று தெரிந்ததும், மிகுந்த வருத்தத்தில் உள்ளனர்.