இந்திய வெளியுறவு அமைச்சு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

வெள்ளி சனவரி 22, 2021

இந்திய வெளியுறவு அமைச்சு 4 மீனவர்கள் நெடுந்தீவின் வடமேற்கு கடலில் உயிர் நீத்த சம்பவம் தொடர்பில் தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இவ்விவகாரம் தொடர்பில் அது வெளியிட்ட ஊடக அறிக்கையில்,

மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபிமானத்துடன் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறோம்.

மூன்று இந்திய மீனவர்கள் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஒரு மீனவர் பயணித்த படகு இலங்கை கடற்படைக் கப்பலுடன் மோதுண்டதில் உயிரிழந்த துரதிர்ஷ்ட சம்பவத்தையடுத்து நாம் அதிர்ச்சியடைகிறோம்.

இச்சம்பவம் தொடர்பாக தமது கடும் எதிர்ப்பை இலங்கை வெளியுறவு அமைச்சருக்கு இந்திய உயர் ஸ்தானிகர் தெரிவித்ததாக அமைச்சு தெரிவித்துள்ளது.

உயிரிழப்பு குறித்து எமது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்திய நாங்கள், மீனவர்கள் தொடர்பான பிரச்சினைகளை மனிதாபி மானத்துடன் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி னோம்.

இது தொடர்பில் இரு அரசாங்கங்களுக்கிடையில் தற்போதுள்ள புரிந்துணர்வுகள் நிச்சயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். மீண்டும் இது நிகழாமல் பார்த்துக்கொள்ள அதிக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இந்திய வெளியுறவு அமைச்சு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.