இந்திய விமானங்களில் தமிழ் மொழி இல்லை - உரிமைக்குரல் எழுப்பிய நடிகர்

சனி ஜூன் 08, 2019

சிறீலங்கா விமானத்திலேயே தமிழ் மொழி அறிவிப்புகள் உண்டு; ஆனால் இந்திய விமானங்களில் இல்லையா? என்று தமிழ் நகைச்சுவை நடிகர் சதிஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக நடிகர் சதிஷ் வியாழனன்று தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

சிறீலங்கா தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் (SrilankanAirways ல்) கூட தமிழில் அறிவிப்பு செய்கிறார்கள். ஆனால் தமிழ் நாட்டிற்குள் இயங்கும் எந்த விமானத்திலும் தமிழில் அறிவிப்பு செய்யப்படுவதில்லை. வசதிக்காக மட்டும் அல்ல உரிமைக்காகவும் கேட்கிறோம்.  வேண்டும்தமிழ் . வேண்டிக்கேட்கும் தமிழர்கள் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.