இந்திய வர்த்தகர்களுக்கு பல கோடி ரூபா நட்டம்

திங்கள் நவம்பர் 16, 2020

 இலங்கையில் மஞ்சள் தூள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளமையால் இந்திய வர்த்தகர்களுக்குப் பல கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவலை வெளியிட்டுள்ளது.

தமிழகம் ஈரோடில் அதிகளவில் மஞ்சள் வர்த்தகம் இடம் பெறுகின்ற நிலையில், அங்கிருந்து கடந்த காலங்களில் இலங்கைக்கு மஞ்சள் இறக்குமதி செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இலங்கையில் மஞ்சள் தூள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய வர்த்தகர்களுக்கு சுமார் 50 கோடி ரூபா இழப்பு ஏற்பட்டி ருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவலை வெளி யிட்டுள்ளது.

எனினும் இலங்கையில் தற்போது மஞ்சள் இறக்குமதி தடை விதிக்கப்பட்டுள்ளதால், அது தமிழகத்தில் உள்ள மஞ்சள் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்களைக் கடு மையாகப் பாதித்திருப்பதாக, ஈரோடு மஞ்சள் வணிகர் கள் சங்கத்தின் செயலாளர் எம். சத்தியமூர்த்தி தெரிவித் துள்ளார்.

கடந்த காலங்களில் அங்கிருந்து வருடாந்தம் சுமார் 7500 தொன் மஞ்சள் இலங்கைக்கு ஏற்றுமதி செய்யப் பட்டதா கவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.