இந்தியா, சீனாவுக்கு பிரித்தானிய பிரதமர் வேண்டுகோள்

வெள்ளி ஜூன் 26, 2020

 எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரித்தானிய  பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியுள்ளார்.

 பிரித்தானிய நாடாளுமன்றத்தில், இந்தியா-சீனா இடையிலான மோதலால் பிரித்தானிய  நலனுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து பழமைவாத கட்சி உறுப்பினர் பிலிக் டிரம்மண்ட் கேள்வி எழுப்பினார்.
 
அதற்கு பதில் அளித்து பிரித்தானிய  பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறியதாவது:-

லடாக்கில் உள்ள சூழ்நிலை மிகவும் தீவிரமான, கவலைக்குரிய அம்சமாகும். இதை பிரித்தானியா  உன்னிப்பாக கவனித்து வருகிறது. எல்லை பிரச்சனையை தீர்க்க இந்தியாவும், சீனாவும் பேச்சுவார்த்தை நடத்துவதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.