இந்தியா – சிறிலங்கா படைகள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கூட்டு இராணுவப் பயிற்சி

திங்கள் டிசம்பர் 02, 2019

இந்தியா – சிறிலங்கா படைகள் இணைந்து இந்தியாவில் கூட்டு இராணுவப் பயிற்சில் ஈடுபட்டுள்ளன. மித்ரா சக்தி பயிற்சி (நுஒநசஉளைந ஆவைசய ளூயமவi) என அழைக்கப்படும் இப்பயிற்சி இன்று (02) மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஆரம்பமானது.

சிறிலங்கா ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் இந்த கூட்டு இராணுவப் பயிற்சி ஆரம்பமாகியுள்ளது. 

சிறிலங்காவில் போர் இல்லாத நிலையில், எதற்காக சிறிலங்கா படைகளுக்கு பயிற்சிகளை வழங்கவேண்டும் என தமிழகத்திலுள்ள தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் மத்தியில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 

சிறிலங்காவில் போர் இல்லாத நிலையில் எதற்காக இப்பயிற்சி? தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கேள்வி

எதிர்காலத்தில் தமிழ் மக்கள் ஆயுதப் போhராட்டம் ஒன்றை ஆரம்பித்தால் அதை அடக்கும் நோக்குடன் இந்தியா சிறிலங்கா படைகளுக்கு பயிற்சியை வழங்குகின்றதா என்ற கேள்வி எழுந்துள்ளது எனவும் அவர்கள் கூறியுள்ளனர். 

7 ஆவது முறையாக இடம்பெறும் இப்பயிற்சிகள், மகாராஷ்டிராவிலுள்ள யுரனொ இராணுவ தளத்தில் நடைபெற்று வருகின்றன. (துரசயழெ ஆடைவையசல ளுவயவழைn) எதிர்வரும் டிசம்பர் 14 ஆம் திகதி வரையான இரு வாரங்களுக்கு இப்பயிற்சி இடம்பெறவுள்ளது. 

இரு நாட்டு இராணுவங்களும் இணைந்து மேற்கொண்ட 6ஆவது மித்ரா சக்தி கூட்டுப் பயிற்சி, கடந்த 2016 ஒக்டோபர் 24 முதல் நவம்பர் 06 வரை சிறிலங்காவில் நடைபெற்றிருந்தது. 

சிறிலங்காவில் போர் இல்லாத நிலையில் எதற்காக இப்பயிற்சி? தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்கள் கேள்வி

கடந்த காலங்களில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்தொழிக்கும் நோக்கத்துடன் இந்தியப் படைகள் சிறிலங்கா படைகளுக்கு நவீன பயிற்சிகளை வழங்கியிருந்தன. 

தொழில்நுட்ப ரீதியாக இந்தியா வழங்கிய பயிற்சிகளின் அடிப்படையிலேயே சிங்கள விமானப் படைகள் தமிழர் தாயகத்தில் தமிழ் மக்களின் பொருளாதார இலக்குகள் மற்றும் உற்பத்தி மையங்கள் மீது விமானத் தாக்குதல்களை நடத்தின. இதன் மூலம் தமிழ் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டன. 

தற்போது, தமிழீழ விடுதலைப் புலிகளின் கட்டமைப்புக்கள் இல்லாமல் போயுள்ள நிலையிலும், இரு நாட்டுப் படைகளும் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்கத்கது.