இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

சனி சனவரி 16, 2021

கடந்த வருடம் இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று உருவானதையடுத்து, ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. கை கழுவுதல், முக கவசம் அணிதல், சமூக விலகலை கடைப்பிடித்தல் போன்றவை கொரோனா வரும் முன் பாதுகாக்கும் முக்கியக் காரணிகளாக பார்க்கப்பட்டது. 

இதற்கிடையே இதற்கான தடுப்பு மருந்துகளை கண்டுப்பிடிக்கும் பணிகளும் தீவிரமாக நடந்தன. இந்நிலையில் இந்தியா முழுவதும் கொரோனா தடுப்பூசி திட்டத்தை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

இதனையடுத்து இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகளுக்கான அவசர கால பயன்பாட்டுக்கு, மத்திய அரசு அண்மையில் ஒப்புதல் அளித்தது. மேலும் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளை, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

முதற்கட்டமாக  இந்தியா முழுவதும் 2,934 மையங்களில், மூன்று லட்சம் முன் கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோல் தமிழகத்தில் 166 மையங்களில், முதற்கட்டமாக 5 லட்சத்து 56 ஆயிரத்து 500 நபருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. தடுப்பூசி போடும் பணிகளை மதுரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.