இந்தியா முழுவதும் மின்சார லைட்டுகள் அணைக்கப்பட்டது!

ஞாயிறு ஏப்ரல் 05, 2020

இந்திய  பிரதமர் வேண்டுகோளை ஏற்று நாடு முழுவதும் மக்கள் தங்களது வீடுகளில் லைட்டுகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மாதம் 25-ந்திகதியில் இருந்து ஊடரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 10-வது நாளான கடந்த 3-ந்திகதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு வீடியோ மூலம் ஒரு செய்தியை வெளியிட்டார்.

அப்போது, ஏப்ரல் 5-ம் திகதி இரவு 9 மணிக்கு விளக்குகள் அனைத்தையும் 9 நிமிடங்கள் அணைத்துவிட்டு விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் அல்லது செல்போன் லைட் ஏதாவது ஒன்றை ஒளிர விடவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அதன்படி இன்றிரவு சரியாக 9 மணிக்கு இந்தியாவில் உள்ள மக்கள் தங்களது வீட்டில் மின்சார லைட்டுகளை அணைத்துவிட்டு விளக்குகள், மெழுகுவர்த்திகளை ஏற்றினர். சிலர் பட்டாசுகள் வெடித்து ஒற்றுமையாக கொரோனாவை எதிர்கொள்வோம் என்பதை வெளிப்படுத்தினர்.