இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது!

செவ்வாய் மார்ச் 12, 2019

அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது என பிரியங்கா முதன்முறையாக இன்று பேசிய காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார். 

நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்றது.

அப்போது அவர் கூறுகையில், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பிரதமர் மோடி அரசு படுதோல்வி அடைந்துள்ளது.

வரும் நாடாளுமன்ற தேர்தல் மூலம் மக்கள் தங்களின் எதிர்காலத்தை தேர்வு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு, பெண்களுக்கு பாதுகாப்பு, விவசாயிகளின் எதிர்காலம் போன்றவை இந்த தேர்தலில் முக்கியமாக இருக்கும். நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.

அன்பு, நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட இந்தியாவில் இன்று நடப்பது வேதனை அளிக்கிறது என பிரியங்கா முதன்முறையாக இன்று பேசிய கட்சி நிகழ்ச்சியில் குறிப்பிட்டார்.

அதன்பின்னர், காந்தி நகரில் உள்ள அடலஜ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமீபத்தில் கட்சியில் பொறுப்பேற்ற பிரியங்கா காந்தி பேசினார்.

இதேபோல், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், பாஜக வெறுப்பு அரசியலை கையாண்டு வருகிறது. தன்னாட்சி அமைப்புகளை பாஜக சீர்குலைக்கிறது. பாஜக ஆட்சியில் வேலையின்மை அதிகரித்து உள்ளது. பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழைகளின் பணம் பணக்காரர்களுக்கு தரப்பட்டது. விவசாயி களிடம் இருந்து லாபம் வந்தாலும் அது 15 கோடீஸ்வரர்களுக்கு மட்டுமே செல்கிறது என குறிப்பிட்டார்.