இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14,506 பேருக்கு கொரோனா!

புதன் ஜூன் 29, 2022

புதுடெல்லி- இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 14,506க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மீண்டும்

இந்தியாவில் குறைந்த நிலையில் காணப்பட்ட கொரோனா வைரஸ் பரவல், தற்போது பல்வேறு மாநிலங்களில் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் மீண்டும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாடுகள்

அண்மையில் ஒன்றிய சுகாதார அமைச்சகம், மாநில அரசுகளுக்கு சுற்று அறிக்கையை அனுப்பியது அதில், மாநில அரசுகள் கொரோனா பரவலை கட்டுப்படுத்த, கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த வேண்டும் எனவும், அனைவரும் கட்டாயமாக முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் போன்ற பல்வேறு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதியதாக

இதுகுறித்து ஒன்றிய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 14,506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,34,33.34ஆக அதிகரித்துள்ளது. 

உயிரிழப்பு

மேலும் 99,602 பேர் இந்தியா முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 30 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 5,25,077ஆக அதிகரித்துள்ளது. 

இறப்பு விகிதம்

அதேபோல் இறப்பு விகிதம் 1.21 சதவீதமா உள்ளது எனவும், இதுவரை கொரோனா தொற்றில் இருந்து 11,574 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர், இதன் மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4,28,08,066ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் குணமடைந்தோர் விகிதம் 98.59 சதவீதமாக உள்ளது.

தடுப்பூசிகள்

இந்தியா முழுவதும் இதுவரை 1,97,46,57,138 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. வியாழக்கிழமை மட்டும் 13,44,788 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.