இந்தியாவின் புலம்பெயர் மாணவர்களுக்கான புலமைப் பரிசில் திட்டம் !

வியாழன் ஓகஸ்ட் 08, 2019

இந்திய அரசாங்கம் 2006 - 2007 ஆம் ஆண்டுகளிலிருந்து புலம்பெயர் பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் திட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது.

இந்தத் திட்டத்தின் கீழ், இந்தியப் பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்புக் கற்கை நெறிகளைத் தொடர்வதற்கு இந்திய வம்சாவழி பிரஜைகள் மற்றும் இந்தியாவில் வதியாத இந்தியர்களுக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன.   

இலங்கையிலிருந்து மேற்குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் இந்த புலமைப் பரிசிலுக்கு தகுதியுடையவர்களாவர். அத்துடன் இதன் கீழ் அவர்களுக்கு தொழில்சார் மற்றும் தொழில்சாரா ஆகிய இரண்டு வகைக் கற்கை நெறிகளைத் தொடர்வதற்கான (மருத்துவம், துணை மருத்துவம் விலக்கலாக) நிதி உதவிகளும் வழங்கப்படும். 

புதுமுக வகுப்புக்கான மாணவர்கள் (முதலாம் ஆண்டு) மாத்திரமே விண்ணப்பிக்க முடியும். இந்தியாவில் உயர் இரண்டாம் நிலைக் கல்வியைக் கற்ற மாணவர்கள் இந்தப் புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பிக்க முடியாது. 

http://www.spdcindia.gov.in/login/guideline.php என்ற இணையத்தள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும். தகுதியான விண்ணப்பதாரிகள் தங்களது விண்ணப்பங்களை மேற்குறிப்பிட்ட இணையதளத்தில் நேரடியாக எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி  சமர்ப்பிக்க முடியும்.