இந்தியாவிற்கு படகு சேவை!

சனி செப்டம்பர் 14, 2019

இந்தியாவின் தமிழ்நாட்டிற்கு மீண்டும் படகுசேவையை ஆரம்பிப்பதற்கு கலந்துரையாடப்பட்டதாக  சிறிலங்கா பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அத்தோடு இலங்கைக்கு வருகை தந்த தமிழக முன்னாள் முதலைமைச்சர்  முத்துவேல் கருணாநிதி மற்றும் கருணாநிதியின் மகளான கனிமொழியுடன்சிறிலங்கா   பிரதமர் கலந்துரைாயடலில் ஈடுபட்டார்.

இச்சந்தின்போதே பிரதமர் அலுவலகத்தில் வைத்து  இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

தான் இது குறித்து ஆர்வத்துடன் இருப்பதாக சிறிலங்கா பிரதமர் அவர்களிடம் தெரிவித்தார்.

அத்தோடு கடந்த 2011 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் தமிழ்நாட்டின் தூத்துக்குடிக்கான படகு சேவை தொடங்கியது.

ஆனால் போக்குரவரத்து அதிகளவில் காணப்படாமையினால் படகு சேவைகள் அணைத்தும் நிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.