இந்தியப் பெருங்கடலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!

புதன் பெப்ரவரி 12, 2020

இலங்கையின் தென்கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று அதிகாலை 2.34 மணிக்கு 5.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

இந்த நிலநடுக்கம் காரணமாக இலங்கைக்கு எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.