இந்தோனேசிய முகாமிலிருந்து வெளியேறிய ரோஹிங்கியா அகதிகள்

ஞாயிறு சனவரி 17, 2021

இந்தோனேசியாவின் Lhokseumawe பகுதியில் உள்ள Meunasah Mee Kandang கிராம பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த 249 ரோஹிங்கியா அகதிகள் அங்கிருந்து வெளியேறியிருக்கின்றனர். 

முன்னதாக, இந்த முகாமில் ஜூன் 25,2020 இந்தோனேசியாவில் தஞ்சமடைந்த 99 ரோஹிங்கியாக்கள் வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து செப்டம்பர் 27, 2020 அன்று தஞ்சமடைந்த 297 ரோஹிங்கியாக்கள் வைக்கப்பட்டனர். இதன் மூலம்  396 ரோஹிங்கியா அகதிகள் அந்த முகாமில் வைக்கப்பட்டிருந்தனர். 

இந்த சூழலில் Lhokseumawe உள்ளூர் அரசாங்கத்திடமிருந்து ஐ.நா. அகதிகள் ஆணையத்திடம் இந்த அகதிகளை ஒப்படைத்த பிறகு 249 அகதிகள் அம்முகாமிலிருந்து வெளியேறியிருக்கின்றனர். இதன் மூலம் முகாமில் உள்ள அகதிகளின் எண்ணிக்கை 103 ஆக குறைந்துள்ளது.