இந்தோனேசியாவில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் வேறு பகுதிக்கு இடமாற்றம்

ஞாயிறு அக்டோபர் 18, 2020

இந்தோனேசியாவின் வடக்கு சுமாத்ராவில் உள்ள Medan பகுதியில் வைக்கப்பட்டிருந்த 12 ஈழத்தமிழ் அகதிகள் தெற்கு Sulawesi பகுதியில் உள்ள Makassar பகுதிக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் பாதுகாப்பு காரணங்களுக்காக நடந்துள்ளதாக Makassar குடிவரவுத் தடுப்பு மையத்தின் தலைமை அதிகாரி Togol Situmorang தெரிவித்துள்ளார். 

“தமிழ் அகதிகளின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு அவர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர். ஏனெனில் Medan பகுதியில் அவ்வப்போது தகராறுகள் நடந்திருக்கின்றன,” எனக் கூறுகிறார் தலைமை அதிகாரி Togol Situmorang.  

இந்த அகதிகள் சுமார் 7 ஆண்டுகளாக இந்தோனேசியாவில் அகதிகளாக வசித்து வருவதாகக் கூறப்படுகின்றது. 

மேலும் இது குறித்து பேசிய Situmorang, “அகதிகளிடையே தகராறுகள் நடந்து வந்ததால், மோசமான விஷயங்கள் நடப்பதைத் தவிர்க்க இவர்களை இடம் மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது,” எனத் தெரிவித்திருக்கிறார். 

தற்போதைய நிலையில், Makassar தடுப்பு மையத்தின் கண்காணிப்பின் கீழ் ஒட்டுமொத்தமாக 1,672 அகதிகள் வைக்கப்பட்டுள்ளனர்.