இந்தோனேஷிய காட்டுத் தீயினால் அண்டை நாடுகளை சூழ்ந்த கரும்புகை!

வியாழன் செப்டம்பர் 12, 2019

இந்தோனேசியாவில் சுமத்ரா, கலிமந்தன் மற்றும் போர்னியோ உள்ளிட்ட தீவுகளில், கடந்த சில நாட்களாக கடுமையான காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக அப்பகுதியில் கரும்புகை சூழ்ந்து கடுமையான காற்று மாசு நீடிக்கிறது. காற்று மாசு காரணமாக 400 பாடசாலைகள் மூடப்பட்டடுள்ளன.

10 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் காற்று மாசு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் வான்வழிப் பயணங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒருமாதமாக நிகழும் காட்டுத் தீயை அணைக்க சுமார் 9,000 இராணுவ வீரர்களை இந்தோனேசியா அனுப்பியுள்ளது. சுமார் 239 மில்லியன் தண்ணீர் இதுவரை காட்டுத் தீயை அணைக்க பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், இதுவரை 5,062 தீ விபத்து ஏற்பட்ட பகுதிகள் கண்டறிப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இந்தோனிஷியாவில் பற்றி எரியும் தீயின் தாக்கம், அதன் அண்டை நாடுகளான மலேசியா மற்றும் சிங்கப்பூரிலும் கரும்புகை சூழ்ந்துள்ளது.

மலேசியாவுக்கு உட்பட்ட 16 மாநிலங்களில் 11 மாநிலங்களின் காற்றின் தரக்குறியீடு 101 முதல் 200 ஆக குறைந்து மிகமோசமான நிலையை உணர்த்தி வருகிறது.