ஈபிள் கோபுரம் அருகே கண்டெடுக்கப்பட்ட துப்பாக்கி ரவைகளால் பரபரப்பு!

புதன் அக்டோபர் 28, 2020

பிரான்ஸிலுள்ள  ஈபிள் கோபுரம் மற்றும் அதன் அருகேயுள்ள ஆர்க் டி ட்ரையோம்ப் என்ற இடத்திலும்  காணப்பட்ட பொதியில் துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டதால் அப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளையும், பொதுமக்களையும் பொலிஸார் உடனடியாக அப்புறப்படுத்தியதோடு குறித்த துப்பாக்கி ரவைகள் அடங்கிய பொதியையும் பத்திரமாக எடுத்துச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.