இராஜினாமா செய்யத் தயார்!

புதன் மே 22, 2019

 சிறிலங்கா ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும்  கோரிக்கை விடுத்தால் அமைச்சுப் பத­வி­யினை இரா­ஜி­னாமா செய்­வ­தற்கு நான் தயா­ராக உள்ளேன் எனத் தெரிவித்த அமைச்சர் ரிஷாத் பதியூதீன், நானும்  எனது கட்­சியை சேர்ந்த இரண்டு  பிரதி அமைச்­சர்­களும் பத­வி­களை  இரா­ஜி­னாமா செய்­து­விட்டு பாரா­ளு­மன்­றத்தில்  பின்­வ­ரிசை ஆச­னத்தில் அமர்­வ­தற்கு  தயா­ராக உள்ளோம் என்றும் குறிப்பிட்டார்.

சிறிலங்கா  ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நேற்று  அமைச்­ச­ரவைக் கூட்டம்  இடம்­பெற்­றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே  அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இதன்போது தன்­ மீ­தான  குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில்  அமைச்சர் ரிஷாத் பதி­யுதீன்  விளக்­க­ம­ளித்­துள்ளார்.  தனக்கு எதி­ராக   எதி­ர­ணி­யினால் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள  நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையில் தெரி­விக்­கப்­பட்­டுள்ள   பத்து குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் அவர்  விளக்கி கூறி­யுள்ளார். 

உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்­டுத்­தாக்­குதல் சம்­பவம் தொடர்பில்  கைது செய்­யப்­பட்ட   நபரை விடுக்­கு­மாறு   இரா­ணு­வத்­த­ள­ப­தி­யிடம்  தான் கோரி­ய­தாக  தெரி­விக்­கப்­படும் குற்­றச்­சாட்டு மற்றும்  குண்­டுத்­தா­ரி­க­ளான  சகோ­த­ரர்­களின்  தந்­தை­யான  இப்­ராஹிம்  உட­னான  தொடர்பு குறித்த குற்­றச்­சாட்டு என்­பன குறித்தும் அமைச்சர்  விளக்­க­ம­ளித்­துள்ளார்.   தன்­மீ­தான  குற்­றச்­சாட்­டுக்கள்  அபாண்­ட­மா­னவை என்று  அவர்   தெரி­வித்­தி­ருக்­கின்றார்.  

இந்தக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.