ஈராக் படகு விபத்தில்100 க்கும் அதிகமானோர் பலி

சனி மார்ச் 23, 2019

ஈராக் – மொசூல் நகரிலுள்ள ரைக்ரிஸ் எனும் நதியில் படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் அதில் பயணித்த பயணிகளிள் 100 க்கும் மேற்பட்டடோர்  வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

அளவிற்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்றமையே இந்த விபத்திற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த  விபத்தில் மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளின் தகவல் படி அந்த விபத்தில் பெண்களும் குழந்தைகளுமே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த விபத்தில் பாதிக்கபட்டோரை மீட்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.