ஈரானிய அகதியின் தீக்குளிப்புக்கு ஐ.நா.அதிகாரிகளே காரணம் என குற்றச்சாட்டு

புதன் மே 04, 2016

ஓமிட் மசோமாலி, 23 வயதான ஈரானிய அகதியான நவுருவில் உள்ள ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்ததார். கடந்த வாரம் அகதிகளுக்கான ஐ.நா.ஆணைய அதிகாரிகள் இந்த முகாமை பார்வையிட வந்துள்ளனர். அப்போது அந்த அகதி அதிகாரிகள் முன்னிலையிலேயே தீக்குளித்தார்.

இந்த சம்பவம் ஐ.நா.அதிகாரிகளின் மீதான குற்றச்சாட்டாக இப்போது எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய பிரிஸ்பேன் மருத்துவமனையில் அவர் இறந்துள்ள நிலையில் இக்குற்றச்சாட்டு நவுருவில் உள்ள அகதிகளால் முன்வைக்கப்பட்டுள்ளது.

தடுப்பில் இருந்த ஓமிட், ஐ.நா.அதிகாரிகளை முறையிட்ட போது இன்னும் பத்து ஆண்டுகள் நவுரு தடுப்பு முகாமிலேயே தொடர்ந்து இருக்க வேண்டும் என தெரிவித்ததாலேயே ஓமிட் மனமுடைந்து தீக்குளித்தாக சொல்லப்படுகிறது. 

ஐ.நா.அதிகாரிகளின் பேச்சை தொடர்ந்து ஓமிட் போலவே மேலும் சிலரும் தற்கொலைக்கு முயன்றதாக தெரிய வந்துள்ளது.