இராணுவ விமானம் மூலம் இடம் மாற்றப்பட்ட கொரோனாத் தொற்றாளர்கள்!

வியாழன் அக்டோபர் 29, 2020

பிரான்ஸில் கொரோனாத் தொற்றுப் பாதிப்பானது  மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இராணுவ விமானம் மூலம் கொரோனா நோயாளிகள் இடம் மாற்றப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அந்நாட்டில் ஆரம்பித்துள்ள  கொரோனாத் தொற்றின் 2ஆவது அலையைக்  கட்டுப்படுத்தும் வகையில் சிகிச்சையை விரிவாக்கும் பொருட்டு, அதிக பாதிப்புள்ள வைத்தியசாலைகளிலிருந்து குறைவான பாதிப்புள்ள பகுதிகளுக்கு நோயாளிகள் மாற்றப்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில், அவிக்னான் நகரில் இருந்து 800 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள ப்ரெஸ்ட் நகர் வைத்தியசாலைக்கு இராணுவ விமானம் மூலம் நோயாளிகள் இடம் மாற்றப்பட்டனர்.