இரசாயன தொழிற்சாலையில் பாரிய தீ!

வெள்ளி நவம்பர் 22, 2019

கட்டுப்பெத்தவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையில் பாரிய தீபத்து அங்குலானை, கட்டுப்பெத்தவில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்குலானை சந்தி, மொரடுவை பிரதேசத்தில் அமைந்துள்ள இரசாயன தொழிற்சாலையொன்றிலேயே இந்த தீவிபத்து இன்று அதிகாலை 3.15 மணியளவில் ஏற்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து தீயினை கட்டுபடுத்த மருதானை மற்றும் கல்கிஸ்ஸ தீயணைப்பு பிரிவினருடன் 12 வாகனங்கள் சேவையில் ஈடுபட்டதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தொழிற்சாலை கட்டிடம் நான்கு மாடிகளை கொண்டமைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.