இரணைதீவு மக்களுக்குச் சரியானதொரு முடிவை வழங்க வேண்டும்!!

ஞாயிறு மார்ச் 07, 2021

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் உள்ள பல தேவாலயங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்படி, யாழ்ப்பாணம் பொஸ்கோ புனித திரேசா தேவாலயத்தில் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.இதன்போது, முஸ்லிம்களின் உடல்களைப் புதைப்பது தொடர்பாக மாற்று நடவடிக்கைகளை மேற்கொண்டு, இரணைதீவு மக்களுக்குச் சரியானதொரு முடிவை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, இதே கோரிக்கையை முன்வைத்து முல்லைத்தீவின் தேவாலயங்களிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.