இரண்டாம் உலகப் போர்க்கால ஆங்கிலத் திரைப்படத்தில் நடிக்கும் ஈழத்தமிழ்ச் சிறுமி!

ஞாயிறு ஓகஸ்ட் 02, 2020

இரண்டாம் உலகப் போர்க்காலத்தை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ள சமர்லாண்ட் (Summerland) எனும் ஆங்கிலத் திரைப்படத்தில் இன்னிசை ஆரபி கபிலன் என்ற ஈழத்தமிழ்ச் சிறுமி நடித்துப் பெருமை சேர்த்துள்ளார்.

 

Innisai2

 

பிரித்தானியாவின் தலைநகர் இலண்டனின் ஹென்டென் (Hendon) பகுதியில் வசித்து வரும் ஒன்பது வயது நிரம்பிய குறித்த சிறுமி, ஏற்கனவே சணல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய த அண்சிவில் வோர் (The Uncivil War) (நாகரீகமற்ற போர்) என்ற பிறெக்சிற் (Brexit) பற்றிய திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

 

Innisai

 

சமர்லாண்ட் திரைப்படத்தில் இன்னிசை நடித்த பொழுது அவருக்கு வயது ஏழு. இவ்வாண்டு ஒன்பது வயதை இன்னிசை பூர்த்தி செய்துள்ள நிலையில் இரண்டு ஆண்டுகள் கழித்து 31.07.2020 வெள்ளிக்கிழமை அன்று வெள்ளித்திரைகளில் சமர்லாண்ட் படம் திரையிடப்பட்டுள்ளது.

 

trailer