இரண்டு வாய்களுடன் பிறந்த அதிசய பெண் குழந்தை!!

ஞாயிறு மே 31, 2020

அமெரிக்காவின் கரோலினா பகுதியில் பெண் ஒருவருக்கு சமீபத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தை மிகவும் அரிய நோயான டிப்ரோ சோபஸ் என்ற நோயுடன் பிறந்துள்ளது.

இந்த வகை நோய் உள்ள குழந்தைகளுக்கு முகத்தில் உள்ள ஏதாவது ஓர் உறுப்பு இரண்டாக இருக்கும். அந்தவகையில் இந்த குழந்தைக்கு பிறக்கும்போதே இரண்டு வாய்கள் இருந்துள்ளன.

அந்த இரண்டாவது வாயை குழந்தையின் முகத்தில் இருந்து அகற்றுமாறு குழந்தையின் பெற்றோர் மருத்துவர்களிடம் கேட்டுக் கொண்டனர். இதனையடுத்து அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள், குழந்தையின் இரண்டாவது வாயை வெற்றிகரமாக அகற்றிவிட்டனர்.