இரத்த அழுத்தத்தை நீக்கும் இயற்கை உணவும்!

வெள்ளி செப்டம்பர் 20, 2019

இன்று நிறைய மனிதர்களுக்கு ரத்த அழுத்தம் உள்ளது. பொதுவாக ஆங்கில மருந்து சாப்பிடுபவர்கள், தொடர்ந்து இரத்த அழுத்த மாத்திரை சாப்பிட்டுக் கொண்டேயிருப்பவர்கள் இயற்கை உணவு முறையை கடைபிடித்து வந்தால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

1. மன இறுக்கம், மன அழுத்தம் இருந்தால் இதயம் சுருங்கி விரிவடைவதில் மாற்றம் ஏற்படும். அதனால் இரத்த அழுத்தம் ஏற்படும்.

2. சினமும் ஒரு காரணம். ஆம் பொதுவாக கோபப்படுபவர்களுக்கு ரத்த அழுத்தம் இருப்பதைப் பார்க் கிறோம். கோபம் அடையும் பொழுது மன அலைச்சுழல் விநாடிக்கு 25 முதல் 30 வரை அதிகரிக்கும்.

3. அடுத்த முக்கிய காரணம் கவலைப்படுதல். கவலைப்படும் பொழுது இதயம் சுருங்கி விரியும் தன்மையில் மாற் றம் ஏற்படுகின்றது. அதனால் இரத்த அழுத்தம் ஏற் படுகின்றது.

பொதுவாக நிறைய மனிதர்கள் நிகழ் காலத்தில் வாழ்வதில்லை. வாழ்க்கையில் கடந்த காலத்தில் நிகழ்ந்த அனுபவங்களை எண்ணி கவலைப்படுவர். அல்லது எதிர் காலத்தில் என்ன செய்யலாம் என்று வருந்துவர். இப்படி வாழ்வதால் நிகழ் காலம் முழுவதும் கவலை சூழ்ந்து ரத்த அழுத்தம் ஏற்படுகின்றது.

4. டென்ஷன் அடுத்த காரணமாகும். பொதுவாக சிறிய விஷயங்களுக்கு பதட்டம், டென்ஷன் ஆகின்றவர்களுக்கும் இரத்த அழுத்தம் விரைவில் வருகின்றது. பதட்டமும், டென்ஷனும்படும் பொழுது இதயம் மிக வேகமாகத் துடிப்பதை காணலாம்.

5. சுரப்பிகளில் தலைமை சுரப்பியான பிட்யூட்டரி சுரப்பி அதிகமாக சுரந்தால் ரத்த அழுத்தம் வரும். மனிதனின் எண் ணம் சாந்தமாகயிருந்தால் இச்சுரப்பி சரியாக சுரக்கும்.

6. இரத்த அழுத்தத்திற்கு அடுத்த காரணம் நாம் உண்ணும் உணவுப்பழக்கம். நல்ல காரமாக மாமிச உணவு அடிக்கடி உண்பவர்கள், நாவின் ருசிக்காக அடிக்கடி ஹோட்டலில் உண்பவர்கள்...

எண்ணெய் பண்டம் உண்பவர்கள், இரவு அதிக நேரம் கழித்து அளவுக்கு அதிகமாக உணவு உண்டு உடன் படுக்கைக்கு செல்பவர்கள், சாப்பிட்டவுடன் உடலுறவு கொள்பவர்கள், பகலில் உடலுறவு கொள்பவர்கள், இவர் களுக்கெல்லாம் உடலில் இரத்த அழுத்தம் வந்துவிடும்.

இரத்த அழுத்தத்தினால் இதயம் பாதிக்கப்பட்டு மாரடைப்பு வரும். மூளை பாதிக்கப்பட்டு பக்கவாதம் வரும். கண் பார்வை இழக்கச் செய்யும். சிறுநீரகம் பாதிக்கும்.

ரத்த அழுத்தம் நீக்கும் இயற்கை உணவு:-

சப்போட்டா, நெல்லிக்காய், மாதுளை, திராட்சை, ஆரஞ்சு, ஆப்பிள், அன்னாசி, பேரிக்காய், உலர்ந்த திராட்சை இந்த பழங்களை உண்ணலாம்.

காய்கறிகள்:-

வாழைத்தண்டு, பீட்ரூட், காரட் சூப், காலிபிளவர், முள்ளங்கி, வெள்ளரிக்காய், கோஸ்.

கீரைகள்:-

அகத்திக்கீரை, வல்லாரை, முருங்கைகீரை, புதினா, கொத்தமல்லி, கரிசலாங்கன்னி, பொன்னாங்கன்னி, பசலைக்கீரை. துளசி,

பயிறு வகைகள்:-

பச்சைபயிறு, பச்சை பட்டாணி, சோயாபீன்ஸ், கொண்டை கடலை.

தினமும் தாகம் எடுக்கும் நேரத்தில் தண்ணீர் குடிக்கவும். ஒரு நாளில் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.