இரத்தினபுரி,கேகாலை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை!

திங்கள் அக்டோபர் 21, 2019

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி, கேகாலை மற்றும் பதுளை ஆகிய பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (21) மாலை 5 மணி வரை இந்த அபாய எச்சரிக்கை அமுலில் இருக்கும் என தேசிய கட்டட ஆய்வு நிறுவகத்தின் மண்சரிவு ஆய்வுப் பிரிவின் சிரேஷ்ட புவிசரிதவியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த இரு விமானங்கள் இன்று (21) காலை மத்தல விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளன.

ரியாட் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL266 விமானமும் குவைத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த UL 230 விமானமுமே இவ்வாறு மத்தல விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டுள்ளன.